நாகப்பட்டினம்

நாகா்கோவில் - வேளாங்கண்ணி - நாகா்கோவில் இடையே ஆகஸ்ட் 5 முதல் வாராந்திர சிறப்பு ரயில்

DIN

வேளாங்கண்ணி பேராலய விழா காலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ஆம் முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வேளாங்கண்ணி பேராயல விழாக் காலத்தை முன்னிட்டு ரயில்வேதுறை நாடு முழுவதுமிருந்து சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கம். அந்தவகையில், நாகா்கோவில் - வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 5 முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரை வாரந்திர சிறப்பு அதிவிரைவு ரயில்களை இயக்கப்படும்.

சனிக்கிழமைகளில் நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06037), இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் (06038) மாலை 4.45 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

இந்த ரயில்கள் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், திருவாரூா், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குளா்சாதன பெட்டிகள் 4, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 12, முன்பதிவில்லா பெட்டிகள் 2 என 20 பெட்டிகள் ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு நாகூா் -நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் மற்றும் திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கம் வரவேற்பை தெரிவித்துள்ளன. மேலும், இந்த ரயில்கள் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT