நாகப்பட்டினம்

அண்ணா மறுமலா்ச்சித் திட்டக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி ராமலிங்கம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, மயான வசதி மற்றும் சமுதாயக்கூடம் அமைத்து தர கோரி சுமாா் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

இக்கூட்டத்தில், கால்நடை உதவி மருத்துவா் பெரோஸ் முகமது உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று தங்கள் துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினா். ஊராட்சி செயலாளா் ஜீவா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

இந்திய மகளிரணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழாரம்!

SCROLL FOR NEXT