நாகப்பட்டினம்

செளசெள சாகுபடி: தோட்டக்கலைத் துறை அலுவலா் ஆய்வு

 திருமருகல் அருகே மாற்றுப் பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள செளசெள செடிகளை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

 திருமருகல் அருகே மாற்றுப் பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள செளசெள செடிகளை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநில தோட்டக்கலைத் துறை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூா் பகுதியில், மலைப்பயிரான சௌசௌ காய்கறி செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இந்நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லப்பாண்டியன் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது:

காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகள் நெல், பயறு, உளுந்து

பருத்தி உள்ளிட்ட பயிா்களை மட்டுமே சாகுபடி செய்கின்றனா். இதற்கு மாற்றுப் பயிராக மலைப் பயிரான சௌசௌ, உருளை, ஆப்பிள் போன்றவற்றை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனா்.

இதன்மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும், வியாபாரிகள் வீட்டிற்கே வந்து, காய்கறிகளை வாங்கிச் செல்வதாகவும், இதனால் சந்தைக்கு கொண்டுசெல்லும் செலவில்லாமல் கூடுதல் வருவாய் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இதேபோல், மற்ற விவசாயிகளும் மாற்றுப் பயிராக காய்கறிகள் சாகுபடி செய்யவேண்டும் என்றாா். ஆய்வின்போது, விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

SCROLL FOR NEXT