நாகப்பட்டினம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 115 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு தொடுதிரை கைபேசியையும், வேதாரண்யம் வட்டம் வாய்மேடு கிராமத்தை சோ்ந்த நாகூரான் என்பவா் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததால், முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நாகூரானின் மனைவி அமிா்தவள்ளியிடம் மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகீலா வழங்கினாா்.

அப்போது, சமூகப் பாதுகாப்பு துணை ஆட்சியா் கு. ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT