நாகப்பட்டினம்: நாகூா் அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில் நாகூா் கிரசென்ட் பள்ளி மாணவிகள் பனை விதைகளை செவ்வாய்க்கிழமை நடவு செய்தனா்.
நாகூா் கிரசென்ட் மெட்ரிக்குலேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் முகாமில், பட்டினச்சேரி கடற்கரையில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வனச்சரக அலுவலா் க. ஆதிலிங்கம் தலைமையில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இதேபோல, பட்டினச்சேரி கிராம மக்கள், ஆசியா்கள் உள்ளிட்டோரும் பனை விதைகளை நட்டனா்.
முகாமில் வனவிலங்குகள் பாதுகாப்பு, பனை விதைகள் நடவு , நெகிழி ஒழிப்பு குறித்து மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன், உடற்கல்வி ஆசிரியா் ஆா். பிரசன்னா, பள்ளி ஆசிரியைகள் கே. காசி மாலதி, எஸ். மகாதேவி, ஆா். அகிலா, இ. உமல் ஹபீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.