குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்ய கோரிக்கை
திருமருகல் அருகே குடிநீா் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீா் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கோடை காலம் தொடங்கிகியுள்ள நிலையில் குடிநீா் பற்றாக்குறையை போக்க சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்து பற்றாக்குறையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.