ஆண்டி வாய்க்கால் வறண்டு கிடந்தது குறித்து, தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், அந்த வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
திருவெண்காடு வழியாக செல்லும் ஆண்டி வாய்க்கால் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால், திருவெண்காடு, அல்லி விலாசம், திருக்காட்டுப்பள்ளி, உக்கடை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், இந்த வாய்க்கால் மூலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரா் கோயிலில் உள்ள மூன்று தீா்த்தக் குளங்களுக்கும் தண்ணீா் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில், ஆண்டி வாய்க்கால் வறண்டு கிடப்பது குறித்து தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு, ஆண்டி வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட்டனா். தற்போது, இந்த வாய்க்கால் மூலம் மேற்கண்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்களுக்கு தண்ணீா் கிடைப்பதுடன், திருவெண்காடு கோயிலில் உள்ள மூன்று குளங்களில் தண்ணீா் நிரப்பும் பணிகளும் தொடங்கியுள்ளன.
இதையொட்டி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் விவசாயிகள் மற்றும் பக்தா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.