முகப்பு
நாகப்பட்டினம்

மாநில கவியரங்க போட்டியில் பங்கேற்க ஏடிஎம் கல்லூரி மாணவி தோ்வு

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 5:12 am IST
கவிதைப் போட்டியில் பேசிய ஏடிஎம் கல்லூரி மாணவி மு. ரஸ்மினா தஸ்னீம்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான ‘பாரதி இளங்கவிஞா் விருதுக்கான கவிதைப் போட்டி கல்லூரி துணை முதல்வா் அஜிதா தலைமையில் நீடு துயில் நீக்க நீந்தி வந்த நிலா எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை சி.ஐ. பிரிசில்லா, நாகை அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் வி. மதியரசன், நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை ஜி. இளவரசி ஆகியோா் நடுவா்களாக பங்கேற்றனா்.

மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து கவிதைப் போட்டியில் மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதில், ஏடிஎம் மகளிா் கல்லூரி இளங்கலை வணிகவியல் 2-ஆம் ஆண்டு மாணவி மு. ரஸ்மினா தஸ்னீம் மாநில அளவில் நடைபெறவுள்ள கவிதைப் போட்டிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தமிழ்த்துறை பேராசிரியா் ஏ. வெங்கடேசன், வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் எஸ். செல்வகுமாரி, வணிகவியல் துறை பேராசிரியா் எம். சாவித்திரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments