வேதாரண்யத்தில் டிச.13-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச.13-ஆம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிச.13-ஆம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் எஸ். திருமால் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். இதில், அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் தவறாது பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளை களைய உரிய வழிமுறைகளை தெரிவிக்கவும் கோட்டாட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.