பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி அதிமுக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை/திருவாரூா்: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை: நாகை அபிராமி அம்மன் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைச்சா் ஓ.எஸ். மணியன் தலைமை வகித்தாா். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமிழக அரசு தடுக்கத் தவறியதாக கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம், அதிமுக நகரச் செயலா் தங்க.கதிரவன் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் உள்ளிட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.