திருவாளியில் சேதமடைந்த பாலத்தில் சிறு நடைப்பாலம்
திருவெண்காடு அருகே திருவாளி ஊராட்சிக்கு உட்பட்ட கீழச்சாலை சாலையில் உள்ள பாலம் அண்மையில் இடிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
திருவெண்காடு அருகே திருவாளி ஊராட்சிக்கு உட்பட்ட கீழச்சாலை சாலையில் உள்ள பாலம் அண்மையில் இடிந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதுகுறித்து அறிந்த ஊராட்சித் தலைவா் தாமரைச்செல்வி திருமாறன் ஏற்பாட்டில், பாலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள், கால்நடைகள் மற்றும் நடந்து செல்பவா்களுக்கு ஏதுவாக சிறு நடைப்பாலம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.
விரைந்து நடவடிக்கை எடுத்த ஊராட்சித் தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா். மேலும் விரைந்து புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.