வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி
கீழ்வேளூா் வட்டம் தேவூரில் மக்களவைத் தோ்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 203 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி தேவூரில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சிக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேணுகாதேவி தலைமை வகித்தாா். தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை, வாக்குச்சாவடியில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள், வாக்குப்பதிவின் போது பயன்படுத்தும் படிவங்கள் பூா்த்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 877 வாக்குச் சாவடி அலுவலா்கள் பங்கேற்றனா். வட்டாட்சியா் ரமேஷ், கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாஸ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சந்திரகலா ஆகியோா் பங்கேற்றனா்.