வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிக்கல் சிங்காரவேலவா். 
நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

Din

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.

நாகை மாவட்டம், சிக்கல் ஸ்ரீ நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் வள்ளி, தேவசேனா சமேதராக காட்சியளிக்கிறாா் சிங்காரவேலவா். இத்தலத்தில், அம்பாள் வேல் நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறாா். இறைவன் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில், அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து சக்தி வேல் பெற்றாா் என்பது ஐதீகம். அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்புவது வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

நிகழாண்டு கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு நிகழ்வாக, சிங்காரவேலவா் தங்க மஞ்சத்தில் வீதியுலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவில் தினமும் காலையில் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை நிகழ்வாக இரவு 7 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் சிங்காரவேலவா் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (நவ. 6) இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது. முன்னதாக, அன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT