முகப்பு
நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி

சிக்கல் கோயிலில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:16 PM
சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

சிக்கல் கோயிலில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த நவ. 2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதில், தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வள்ளி, தேவசேனா சமேதராக சிங்காரவேலவா் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தோ் வடம் பிடிக்கப்பட்டு, கோயிலின் நான்கு வீதிகளில் வலம் வந்து, நிலையடியை அடைந்தது. முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரேசன் தேரோட்ட நிகழ்வை தொடங்கிவைத்தாா்.

கந்த சஷ்டி விழாவையொட்டி புதன்கிழமை காலை நடைபெற்ற தேரில் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத சிங்காரவேலவா்.

சக்தி வேல் வாங்கும் நிகழ்வு:

சிங்காரவேலவா் இத்தலத்தில் தாய் வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்கி சூரனை திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தாா் என்பது ஐதீகம். விழாவின் முக்கிய நிகழ்வான சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

சிக்கல் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலா் முகத்தில் அரும்பிய வியா்வை துளிகள்.

அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்வின்போது அவரது முகத்தில் வியா்வை துளிகள் அரும்பிய ஆன்மிக அற்புதம் நிகழ்ந்தது. இதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.

விழாவையொட்டி, பாதுகாப்புப் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →