நாகையில் நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்
நாகை மண்டல கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 8) நடைபெறவுள்ளது என இணைப்பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை மண்டல கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 8) நடைபெறவுள்ளது என இணைப்பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவரும் பணியாளா்கள் மற்றும் நிா்வாகத்துக்கு இடையே இணக்கமான சூழலை உருவாக்கி, உறுப்பினா்களுக்கு சிறந்த சேவை வழங்க பணி தொடா்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிரவும், அந்தக் குறைகளை விதிகளுக்குள்பட்டு தீா்வு காணவும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளா் நாள் (குறைதீா் கூட்டம்) நிகழ்ச்சி நடத்த கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாகை மண்டலத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை நாகை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டுறவுச் சங்கப் பணியாளா்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.