முகப்பு
நாகப்பட்டினம்

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றம் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 நவம்பர், 2024 at 10:09 PM
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றம் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வருவாய் கிராம உதவியாளருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்கிட வேண்டும். ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ். மதிவாணன், மாவட்டச் செயலா் ஜி. பாஸ்கா், பொருளாளா் வி. போசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →