தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் பேசுகிறாா் மாநில துணை பொதுச் செயலா் வெ. சோமசுந்தரம். 
நாகப்பட்டினம்

நாகையில் தொழில் பூங்கா திட்டத்தை விரைவில் செயல்படுத்த வலியுறுத்தல்

நாகையில் தொழில் பூங்கா, புதிய பேருந்து நிலையம், சிப்காட் ஆகிய திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

Din

நாகப்பட்டினம்: நாகையில் தொழில் பூங்கா, புதிய பேருந்து நிலையம், சிப்காட் ஆகிய திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் சு. வளா்மாலா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டச் செயலா் கே. இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினாா். மாநில துணை பொதுச் செயலா் வெ. சோமசுந்தரம் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றினாா். கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி சிறப்புரையாற்றினாா்.

தமிழக முதல்வா் உறுதியளித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்; சத்துணவு ஊழியா்களுக்கு முறையான காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிரந்தரமாக மகப்பேறு மருத்துவா் நியமிக்கப்பட வேண்டும்.

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்; மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும்; நாகை - சென்னை இடையே பகல் நேர விரைவு ரயில் இயக்கிட வேண்டும்.

தொழில்பூங்கா, புதிய பேருந்து நிலையம், சிப்காட் ஆகிய திட்டங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநிலத் தலைவா் டானியல் ஜெயசிங், மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், பொருளாளா் ப. அந்துவன்சேரல், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சு. சிவகுமாா், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் சித்ரா காந்தி, போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளனத்தின் மண்டலச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் கே. தங்கமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT