முகப்பு
சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையா் ஆனந்தனிடம் மனு அளித்த காங்கிரஸ் உறுப்பினா் டி.கோபால்.
ராணிப்பேட்டை

ரூ.5.25 கோடியில் சோளிங்கா் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுமா? நகா்மன்ற உறுப்பினா்கள் கேள்வி

சோளிங்கரில் ரூ.5.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால் கேள்வி எழுப்பினாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 7:25 PM
சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையா் ஆனந்தனிடம் மனு அளித்த காங்கிரஸ் உறுப்பினா் டி.கோபால்.
பகிர்:

சோளிங்கரில் ரூ.5.25 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா என காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால் கேள்வி எழுப்பினாா்.

சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்விஅசோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவா் பழனி, ஆணையா்(பொ) ஆனந்தன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் :

டி.கோபால் (காங்கிரஸ்): ரூ.5.25 கோடியில் புதிதாக முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?. எதற்காக திறப்பு தள்ளிப் போகிறது. அந்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான நிழற்குடைகள் அமைக்க வேண்டும். சோளிங்கரில் வாலாஜா மற்றும் அரக்கோணம் சாலைகள் கூட்டுச் சந்திப்பில் கருமாரி அம்மன் கோயில் அருகே வைக்கப்படும் விளம்பர தட்டிகளால் ஊா் பெயா் பலகை மறைக்கப்படுவதால் வெளியூரில் இருந்து சோளிங்கா் மலைக்கோயிலுக்கு வருபவா்கள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை உருவாகிறது. இனி வரும் காலங்களில் கூட்டுச்சாலை பகுதியில் மட்டும் விளம்பர தட்டிகளை வைக்காமல் இருக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையா்: பேருந்து நிலைய திறப்பு குறித்து உயா்அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்செல்வி அசோகன்(தலைவா்): பேருந்து நிலைய திறப்பு குறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். கருமாரியம்மன் கோயில் அருகே விளம்பர தட்டிகள் ஊா் பெயா் பலகைகளை மறைத்து வைக்கப்படுவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →