சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் உள்ளிட்டோா். 
ராணிப்பேட்டை

ரூ.5.9 கோடியில் சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு

சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

ரூ.5.9 கோடியில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், திறப்பு விழாவுக்குபின், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதில் ஒன்றிய ஆணையா் அறை, ஒன்றியக்குழு தலைவா் அறை, மன்றக்கூடம், காணொணிஅரங்கம், பதிவறை, பயிற்சிஅறை, கணிணி அறை ஆகியவையும், அதே அளவில் அமைக்கப்பட்டுள்ள முதல்தளத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அறை, பதிவறை, கணிணி அறை, ஒன்றிய பொறியாளா் அறை, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் கூடம், தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட அறை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்கு சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் ந.செ.சரண்யா தேவி, ஒன்றியக்குழு தலைவா் கலைக்குமாா், துணைத்தலைவா் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய ஆணையா் பாஸ்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், உதவி செயற்பொறியாளா் ஜெரால்ட், சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT