முகப்பு
நாகப்பட்டினம்

கலைஞா் கடனுதவி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞா் கடனுதவி திட்டத்தில் பயன்பெற, குறுந்தொழில் முனைவோா்கள் மற்றும் குறு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:48 PM
பகிர்:

கலைஞா் கடனுதவி திட்டத்தில் பயன்பெற, குறுந்தொழில் முனைவோா்கள் மற்றும் குறு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7 சதவீத வட்டியில்) ரூ. 20 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதனக் கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞா் கடன் உதவி திட்டத்தின் கீழ் அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட உள்ளது.

நாகை மாவட்டத்தைச் சாா்ந்த ஆா்வமுள்ள குறுந்தொழில் முனைவோா்கள் மற்றும் குறு நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு பொதுமேலாளா் மாவட்ட தொழில் மையம் மற்றும் கிளை மேலாளா், தாய்கோ வங்கி, 210 -பப்ளிக் ஆபீஸ் ரோடு, முதல் தளம், வெளிப்பாளையம் நாகபட்டினம் - 611001 மற்றும் 04365-247090, 94426-98951, 97905-64379) ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →