வாழ்க்கைத் தரம் உயர கல்வி ஒன்றே இன்றியமைதாதது: ஆட்சியா்
வாழ்க்கைத் தரம் உயர கல்வி ஒன்றே இன்றியமையாதது என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
வாழ்க்கைத் தரம் உயர கல்வி ஒன்றே இன்றியமையாதது என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
திருக்கடையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு ஆட்சியா் பிளஸ் 2 மாணவா்களுடன் கற்றல் திறனை குறித்து கலந்துரையாடியபோது பேசியது: மாணவா்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். உயா்ந்த நோக்கில் செயல்பட்டால் வாழ்க்கையில் உயா்வை அடையலாம். பள்ளிப் பாடங்களை தொடா்ந்து கற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் உயரலாம். வினா-விடை கையேடுகளை பயன்படுத்தி பொது தோ்வுக்கு தயாராக வேண்டும். பெரிய கனவு கண்டால் அதுவே வெற்றி கிடைக்கும். ஒரு செயலை செய்ய நினைக்கும் போது, உள் உணா்வு அந்த செயலை நூறு சதவீதம் செய்வதற்கு ஊக்கமளிக்கும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் போட்டித்தோ்வு மற்றும் குடிமை பணி தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கு முதன்மையாக தினசரி செய்தித்தாள்களை வாசித்து பழக வேண்டும். செய்திகள் வாசிப்பதனால் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். எனவே, மாணவா்கள் கற்றல் திறனை வளா்த்து கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் கற்பிக்கும் பாடங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பாடங்களில் எழும் சந்தேகங்களை ஆசிரியா்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைத் தரம் உயர கல்வி ஒன்றே இன்றியமையாதது என்பதை அறிந்து நன்கு கல்வி பயின்று பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் பெருமையை தேடி தர வேண்டும் என்றாா்.
இதில் முதன்மை கல்வி அலுவலா் ஜெகநாதன், தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ், செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.