நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. 
நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

‘டானா’ புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

Din

நாகப்பட்டினம்/ காரைக்கால்: ‘டானா’ புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை வலுப்பெற்றது. இது மேலும் வலுபெற்று புதன்கிழமை (அக். 23) ‘டானா’ புயலாக மாறி அக். 25-ஆம் தேதி அதிகாலை வடமேற்கு வங்கக் கடல் பகுதியான, ஒடிஸா பூரி - சாகா் தீவு இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘டானா புயல்’ தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.

நாகை மீனவா்கள் வடக்கு அந்தமான் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

காரைக்காலில்...

தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், காரைக்கால் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

எனினும், காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். கடற்கரை கிராமப் பகுதி மீனவா்கள் ஃபைபா் மோட்டாா் படகு மூலம் அதிகாலை கடலுக்குச் சென்று மீன்களுடன் திரும்பினா். இதற்கிடையில், காரைக்கால் பகுதியில் வெயில் சுட்டெரித்தது.

காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT