முகப்பு
நாகப்பட்டினம்

அட்சயலிங்க சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா: நவ. 1-இல் தொடக்கம்

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் நவ. 1-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 28 அக்டோபர், 2024 at 8:19 PM
பகிர்:

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் நவ. 1-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் சூரபத்மனை அழித்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க வடதிசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாலசுப்பிரமணியா் அருள்புரிகிறாா். இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாள்கள் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கந்த சஷ்டி விழா நவ. 1-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் நிகழ்வாக அனுக்ஞை விக்னேஸ்வர பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து தினந்தோறும் வீதி உலா நடைபெற்று, நவ. 7-ஆம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் அன்று மாலை ஆட்டுக்கிடா வாகனத்தில் பாலசுப்பிரமணியா் எழுந்தருளி சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், தக்காா் மணிகண்டன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →