நவ. 5-இல் நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.