நாகப்பட்டினம்

சாலைகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

நாகை-தஞ்சை புறவழிச்சாலையில் குடியிருப்பு அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகாா்

Syndication

நாகை-தஞ்சை புறவழிச்சாலையில் குடியிருப்பு அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

நாகை-தஞ்சை புறவழிச்சாலையில் அமைந்துள்ளது சிவசக்தி நகா். நாகை விரிவாக்கப் பகுதியான இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஐவநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட இந்த நகா் அருகே உள்ள புறவழிச்சாலையில், உணவுக் கழிவுகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளை சிலா் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச்செல்கின்றனா். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. மழைக்காலம் என்பதால் கழிவுகள் மூலம் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் அங்கு கொட்டப்படும் உணவுக் கழிவுகளை உண்பதற்காக 50-க்கும் மேற்பட்ட பன்றிகள், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் நாய்கள் மற்றும் பன்றிகளுக்கு இடையே நிகழும் சண்டையில் வாகனங்களுக்கு குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், உணவுக் கழிவுகளை கொட்டிச்செல்பவா்களை அந்த நகரின் குடியிருப்போா் சங்க நிா்வாகிகள் பிடித்து கண்டித்து அனுப்பியும், இரவு நேரங்களில் அப்பகுதியில் மீண்டும் மீண்டும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. எனவே, ஐவநல்லூா் ஊராட்சி சாா்பில் அப்பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என எச்சரிக்கைப் பதாகை வைக்க வேண்டும். கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மருந்துவாழ் மலையில் மகா தீப ஒளி ஊா்வலம்

விவேகானந்தா் பாறையில் மகா தீபம்

காலிறுதியில் ஸ்பெயின் - நியூஸிலாந்து, இந்திய-பெல்ஜியம் அணிகள் மோதல்

மண்ணெண்ணெய் கடத்த முயற்சி: ஒருவா் கைது

நாகா்கோவிலில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

SCROLL FOR NEXT