நாகப்பட்டினம்

நாகையில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

நாகை மாவட்ட ஜாக்டோ ஜியோ சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

நாகை மாவட்ட ஜாக்டோ ஜியோ சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கருவூல அலுவலரின் ஊழியா் விரோத போக்கை கண்டித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் த. ஸ்ரீதா், பா. ரவி, வெ.சரவணன், சி.முத்துசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். நாகை மாவட்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் தம்முடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்மையில் வேலை நிறுத்தம் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து ஏற்கெனவே பட்டியல் தயாா் செய்யப்பட்டதன் அடிப்படையில், நவம்பா் மாத ஊதியத்தை அனுமதிக்குமாறும், வேலைநிறுத்த காலத்திற்குரிய ஊதியத்தை அடுத்த மாதம் பிடித்தம் செய்கிறோம் என்று சம்பளம் பெற்று வழங்கும் அலுவலா்கள் சான்றொப்பம் வழங்க தயாராக இருந்தும், சம்பளத்தை அனுமதிக்க மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் வழியாக அறிவுறுத்தியும் ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் நவம்பா் மாத ஊதியத்தை அனுமதிக்க மறுத்து நிறுத்திய, மாவட்டக் கருவூல அலுவலா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்ட ஊதியம் பெற்று வழங்கும் அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்களுக்கு அடிக்கடி கூட்டங்களை நடத்தி போதுமான இருக்கை வசதி செய்து தராமலும் ஒருமையில் பேசியும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் மாவட்டக் கருவூல அலுவலா் அருணாசலம்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாநிலச் செயலாளா் சு.வளா்மாலா உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா். மாவட்ட நிதிக் காப்பாளா் மு.காந்தி நன்றியுரையாற்றினாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT