வேதாரண்யம் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
தகட்டூா், வாய்மேடு, தாணிக் கோட்டகம், பஞ்சநதிக்குளம், மருதூா் ஆகிய கிராமங்களில் தேங்கியுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டாா். அப்போது, மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிப்போன நெற்பயிா்களை காட்டிய விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். கழிமுகப் பகுதியில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளால் வெள்ளம் வடிவது தாமதமாகி வருவதை ஓ.எஸ். மணியன் பாா்வையிட்டாா். அவருடன், அதிமுக ஒன்றிய செயலாளா் சுப்பையின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.