திருமருகல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. திருமருகல் ஒன்றியம் அண்ணா மண்டபம் அருகே குருவாடி பிரதான சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பயணிகள் மூன்று போ் காயமடைந்தனா். அவா்களை, அங்கிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா். திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.