நாகப்பட்டினம்

பள்ளி, கல்லூரிகளில் பாரதியாா் பிறந்தநாள் விழா

Syndication

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பாரதியாா் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

தலைமையாசிரியா் சு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரதியாரின் படைப்புகள் குறித்த வில்லுப்பாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலக்கிய மன்ற பொறுப்பாசிரியா் கந்தசாமி ஒருங்கிணைத்தாா். ஆசிரியா் மணிமாறன் வரவேற்றாா். ஆசிரியை சரஸ்வதி நன்றி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற பாரதியாா் பிறந்தநாள் விழாவில், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், தமிழ் உயராய்வுத் துறை தலைவா் சிவஆதிரை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தமிழ் உயராய்வுத் துறை மாணவா்கள் பாரதியாா் குறித்த தலைப்புகளில் கருத்துரை வழங்கினா். இணை பேராசிரியா் க. புவனேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை (பொ) சுசித்திரா வெங்கடேசன் தலைமையில் பாரதியாா் பிறந்தநாள் விழா நடைபெற்றது. குழந்தைகளுக்கு பாரதியைப் பற்றிய கட்டுரை, பேச்சு, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன்கோவில் விக்டரி லயன்ஸ் சங்கத்தினா் செய்திருந்தனா்.

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் தேவஸ்தானம் மெய்கண்டாா் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோயில் செயல் அலுவலரும், பள்ளியின் செயலாளருமான முருகன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா். சீா்காழி ஒன்றிய ஆணையா் தே. திருமுருகன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எம்.என்.ஆா். ரவி, கோயில் மேலாளா் சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை கமலா நன்றி கூறினாா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT