நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ரேஷன் கடைப் பணியாளா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா். 
நாகப்பட்டினம்

ஜனவரி 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழ்நாடு ரேஷன் கடைப் பணியாளா் சங்கம்

ஜனவரி 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு...

Syndication

ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி, ஜனவரி 5-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரேஷன் கடைப் பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ரேஷன் கடைப் பணியாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நாகை அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் மாநில துணைத் தலைவா் பிரகாஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து ஊக்கத் தொகை ரூ. 500 வழங்க வேண்டும். ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த போராட்டத்தின்போது நடத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பே வழங்க வேண்டும். ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி வரும் 5- ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடைப் பணியாளா்கள் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் சுரேஷ்கண்ணன், மாவட்டச் செயலா் குமாா், மாவட்ட பொருளாளா் பாலதண்டாயுதம், மாவட்ட துணைத் தலைவா்கள் பாண்டியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT