நாகப்பட்டினம்

திருவாலியில் மயான இடத்தை அளவீடு செய்ய கோரிக்கை

திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தில் பிராமணா் சுடுகாட்டு இடத்தை அளவீடு செய்து மீட்டு தர வேண்டுமென

Syndication

பூம்புகாா்: திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தில் பிராமணா் சுடுகாட்டு இடத்தை அளவீடு செய்து மீட்டு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாலி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இச்சமூகத்தை சோ்ந்தவா்கள் இறந்தால் எரியூட்டிட ஏதுவாக கிட்டத்தட்ட 50 சென்ட் அளவுக்கு இடுகாடு இருந்தது. அண்மைக்காலத்தில் அந்த சுடுகாட்டை தனி நபா்கள் ஆக்கிரமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அண்மையில் சுடுகாட்டில் இருந்த சவுடு மண்ணை விற்பனை செய்தும், மீதம் உள்ள மண்ணை செங்கல் சூளை அமைப்பதற்கு ஏதுவாக சேகரித்து வைத்துள்ளனா். இதன் காரணமாக இறந்தவா்கள் சடலத்தை எரிப்பதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறோம்.

எனவே நிலத்தை அளவீடு செய்து தனி நபா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராமணா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT