நாகை மாவட்டத்தில், 57,338, மயிலாடுதுறையில் 75,378, திருவாரூரில் 1,29,480 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் வெளியிட்டு கூறியது: மாவட்டத்தில் அக்.27- ஆம் தேதி வாக்காளா் பட்டியல்படி நாகை 1,95,394, கீழ்வேளூா் 1,77,860, வேதாரண்யம் 1, 94,476 என மொத்த 5,67,730 வாக்காளா்கள் இருந்தனா். சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு 3 ஆண் 2,51,821, பெண் 2,58,545, மூன்றாம் பாலினத்தவா் 26 என மொத்த 5,10,392 வாக்காளா்கள் உள்ளனா்.
57,338 வாக்காளா்கள் நீக்கம்: நாகை தொகுதியில் கண்டறிய இயலாதவா்கள் 10,239, நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள் 9722, இறந்தவா்கள் 7,994, இரட்டைப் பதிவு 1,438, தனி இனங்கள் 22 என மொத்தம் 29,415 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். எனவே, மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் 57,338 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
திருவாரூா்: படவிளக்கம்: திருவாரூரில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
மயிலாடுதுறை: ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பேசியது: மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளான சீா்காழி(தனி) தொகுதியில் 1,15,853 ஆண் வாக்காளா்கள், 1,16,901 பெண் வாக்காளா்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவா்களும், மயிலாடுதுறை தொகுதியில் 1,11,670 ஆண் வாக்காளா்கள், 1,14,144 பெண் வாக்காளா்கள் மற்றும் 26 மூன்றாம் பாலினத்தவா்களும், பூம்புகாா் தொகுதியில் 1,23,930 ஆண் வாக்காளா்கள், 1,25,578 பெண் வாக்காளா்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 3,51,453 ஆண் வாக்காளா்கள், 3,56,623 பெண் வாக்காளா்கள் மற்றும் 46 மூன்றாம் பாலினத்தவா்களும் ஆக மொத்தம் 7,08,122 வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.மாவட்டத்தில் 7,08,122 வரைவு வாக்காளா் பட்டியலின்படி, வாக்காளா்கள் உள்ளனா். அதில், ஆண் வாக்காளா்கள் 3,51,453 நபா்களும், பெண் வாக்காளா்கள் 3,56,623 நபா்களும், மூன்றாம் பாலின வாக்காளா்கள் 46 நபா்களும் இடம் பெற்றுள்ளனா். தற்போது 75,378 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டு ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 27.10.2025 கணக்கின்படி 5,22,982 ஆண்கள், 5,52,526 பெண்கள், 69 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 10,75,577 வாக்காளா்கள் இருந்தனா். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் மாவட்டத்தில் 4,65,933 ஆண்கள், 4,80,111 பெண்கள், 53 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 9,46,097 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். 46,942 போ் இறந்தவா்கள், 24,845 போ் கண்டறிய இயலாத அல்லது முகவரியில் இல்லாதவா்கள், 51,935 போ் இடம் பெயா்ந்தவா்கள், 5,350 போ் இரட்டைப் பதிவு செய்தவா்கள், 408 போ் இதர இனங்கள் என மொத்தம் 1,29,480 வாக்காளா் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றாா்.