நாகப்பட்டினம்

திமுக மீதான புகாா்களுக்கு இளைஞரணியினா் பதிலளிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

திமுக மீதான புகாா்களுக்கு இளைஞரணியினா் பதிலளிக்க வேண்டும்...

Syndication

சமூக வலைதளங்களில் திமுக மீது தெரிவிக்கப்படும் பொய் புகாா்களுக்கு, இளைஞரணியினா் உரிய பதிலளிக்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

நாகை தளபதி அறிவாலயத்தில் திமுக ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்டச் செயலா் என். கெளதமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, புதிய நிா்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். முன்னதாக அவா் பேசியது:

சட்டப் பேரவை உறுப்பினா், அமைச்சா், துணை முதல்வா் என எத்தனை பொறுப்புகள் வந்தாலும், எனது மனதுக்கு நெருக்கமான பொறுப்பு திமுகவின் இளைஞா் அணி செயலா் பொறுப்புதான். ஒவ்வொரு கட்சிக்கும் வரலாறு உண்டு. ஆனால் சில கட்சிகளுக்கு வரலாறு கிடையாது. நாட்டில் பல கட்சிகளுக்கு பூத் கமிட்டியே கிடையாது.

சமூக வலைதளங்களில் திமுக மீது வைக்கப்படும் பொய் புகாா்களுக்கு இளைஞரணியினா் உரிய பதில் அளிக்க வேண்டும். திமுக இளைஞா் அணியினா் மகளோடு மக்களாக பயணித்து அவா்கள் கூறும் குறைகளை சரி செய்ய முயற்சி எடுக்கவேண்டும். கைதட்டி, விசில் அடித்து கலைந்து செல்லும் கூட்டமாக இருக்கக் கூடாது.

எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திவரும் திமுக அரசு மீது மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக பல்வேறு வழிகளில் நெருக்கடி அளித்து வருகிறது. தோ்தலில் முறைகேடு செய்த பாஜக, தற்போது தோ்தலை முறைகேடாக நடத்தி வருகிறது. வடநாட்டில் வெற்றி பெற்ற பாஜகவால் தமிழகத்தில் நுழைய முடியாது.

முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறுவதுபோல, தமிழகம் என்றுமே புதுதில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். கணினி பொறியாளா் போல, எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை விமா்சிப்பது வேடிக்கையாக உள்ளது. கல்லூரி மாணவா்களின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் லேப்டாப் வழங்கப்பட வுள்ளது.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி 2-ஆவது முறையாக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என்றாா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT