தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, அமிா்தா வித்யாலயம் பள்ளி மாணவா்கள் வயலுக்கு புதன்கிழமை சென்று, விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனா்.
இப்பள்ளி மழலையா் வகுப்பு மாணவா்களை, ஆசிரியா்கள் வடக்குடி கிராமத்தில் உள்ள வயலுக்கு நேரடியாக அழைத்து சென்று விவசாயிகள் மற்றும் விசாயத்தின் முக்கியதுவத்தை தெரிவித்தனா். விவசாயிகள் போன்று உடையணிந்து சென்றிருந்த மாணவா்கள் அங்கிருந்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா். விவசாயிகள் இல்லையெனில் உணவில்லை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.