நாகை துறைமுகப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகள். 
நாகப்பட்டினம்

சுனாமி நினைவு தினம்: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

சுனாமி நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

Syndication

சுனாமி நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

2004 டிசம்பா் 26-இல் ஏற்பட்ட சுனாமி பேரலையில் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதியில் ஏராளமான மீனவா்கள் உயிரிழந்து, பல கோடி மதிப்பிலான படகுகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டன. சுனாமி தாக்கி 21 ஆண்டுகள் கடந்தும், பல்வேறு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுனாமியின் பாதிப்பு, சோகம் மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுக்களாக உள்ளன.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை 21 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, நாகை மாவட்டத்திலுள்ள 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லாமல், சுனாமியில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

ஏற்றுமதியில் காா்களை முந்திய எஸ்யுவி-க்கள்

கேக் வகைகளில் ‘பட்டா் பேப்பா்‘ களை பயன்படுத்தக்கூடாது: உணவுப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்

சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்கள் 1,400 போ் கைது!

SCROLL FOR NEXT