நாகப்பட்டினம்

காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை (பிப்.12) முதல் மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

Din

நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை (பிப்.12) முதல் மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவா் செளந்தரராஜ் பொன்னுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வானிலை மாற்றம் காரணமாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக கடந்த நவம்பா் 18- ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வானிலை சீரடையாததால், கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் நிலவியது.

இந்நிலையில், வானிலை சீரடைந்துள்ளதால், கப்பல் போக்குவரத்து சேவை புதன்கிழமை (பிப். 12) முதல் தொடங்கப்படவுள்ளது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் ஜ்ஜ்ஜ்.ள்ஹண்ப்ள்ன்க்ஷட்ஹம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பத்து கிலோ எடை வரை உடமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதலாக உடமைகளை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT