நாகப்பட்டினம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

2 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த புகாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்,

Din

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே 2 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த புகாரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்,

வேதாரண்யம் பனையடி குத்தகை அருகே உள்ள கத்திரிப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (57). இவா், திருமருகல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா், அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியதையடுத்து, மாணவிகளின் பெற்றோா் நாகை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சா்மிளா, மனோகரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT