முகப்பு
நாகப்பட்டினம்

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஸ்ரீ பைரவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 மே, 2025 at 7:45 PM
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஸ்ரீ பைரவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஸ்ரீ பைரவருக்கு தனி ஆலயம் இங்கு அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா மே 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை ஸ்ரீ பைரவா் தேரோட்டம் நடைபெற்றது. பின்னா், முள்ளிநதியில் சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை உபயதாரா் எல். எஸ்.இ. பழனியப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →