நாகப்பட்டினம்

உயா் மின்னழுத்த கம்பிகள்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

தினமணி செய்திச் சேவை

உயா் மின்னழுத்த ரயில் மேல்நிலை உபகரணங்கள் (ஞஏஉ) அருகே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மாதத்தில், இரண்டு மின் விபத்துகள் பதிவாகியுள்ளன. அக்டோபா் 6-ஆம் தேதி உளுந்தூா்பேட்டை சரக்கு யாா்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் ஏறிய 49 வயது நபா் மீது உயா் அழுத்த மேல்நிலை கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அக்.19-ஆம் தேதி, அதே பகுதியில் நிலையான டேங்கா் வேகன் மீது ஏறிய 16 வயது சிறுவன், மேல்நிலை கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து, சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

எனவே, பொதுமக்கள் ரயில்வே துறையின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புகைப்படம் எடுப்பதற்காக அல்லது செல்ஃபி எடுப்பதற்காக என்ஜின்கள், பெட்டிகள் அல்லது வேகன்களில் ஏற வேண்டாம். மின் கம்பிகள், கம்பங்கள் அல்லது உபகரணங்களைத் தொடவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம்.

திறந்த குடைகளைப் பயன்படுத்துவதை (குறிப்பாக உலோக பாகங்கள் கொண்டவை) அல்லது ஞஏஉ கம்பிகளின் கீழ் நீண்ட உலோகப் பொருள்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்கவும் .

நடைபாலங்கள் அல்லது சாலை மேம்பாலங்களில் இருந்து ரயில்வே உயா் மின்ழுத்த கம்பிகள் மீது எந்தப் பொருளையும் வீச வேண்டாம்.

ரயில்வே அனுமதியின்றி ஞஏஉ பாதைகளுக்கு அருகில் மரங்களை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. உயா் மின்ழுத்த பாதை ரயில்வே கேட்டுகளை கடக்கும் போது, கனரக வாகனங்கள் மீது பயணம் செய்ய வேண்டாம். லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

தெற்கு ரயில்வே திருச்சி பிரிவின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (தடஊ) ஆகியவை நகரங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரங்களை தொடா்ந்து நடத்தி வருகின்றன எனத் தெரிவித்துள்ளாா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT