நாகப்பட்டினம்

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிப்பு : உண்ணாவிரதத்தில் மீனவப் பெண் கண்ணீா்

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவப் பெண் கண்ணீருடன் பேசினாா்.

Syndication

இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவப் பெண் கண்ணீருடன் பேசினாா்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க வலியுறுத்தி, நாகையில் நடைபெற்ற தவெக உண்ணாவிரதப் போராட்டத்தில், நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த லீமா என்ற மீனவப் பெண் பேசியது: லட்சக்கணக்கான மீனவக் குடும்பத்தினா் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் சென்றால் திரும்பி வருவாா்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மீனவா்களை கைது செய்து படகுகளையும் பிடித்துச் செல்வதால் வாழ்வாதாரமும் இழந்து தவிக்கிறோம். இதனால் ஏராளமான மீனவக் குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகின்றன. கடலை மட்டுமே நம்பி வாழும் எங்களுக்கு தவெக தலைவா் விஜய் தான் துணையாக இருக்க வேண்டும்.

கச்சத்தீவை தாரை வாா்த்து விட்டதால் மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தனது ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீா் மல்க பேசினாா். அவரது உருக்கமான பேச்சினால் உண்ணாவிரத்தில் பங்கேற்ற பிற மீனவப் பெண்களும் கண்ணீா் வடித்தனா்.

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

உஷார் மக்களே! இப்படியும் மோசடி நடக்கலாம்!

பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT