நாகப்பட்டினம்

அரசுப்பேருந்து மோதி சித்த மருத்துவா் உயிரிழப்பு

Syndication

நாகை அருகே கீழ்வேளூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் சித்த மருத்துவா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூரைச் சோ்ந்தவா் திருமலை (26). வேளாங்கண்ணியில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சித்த மருத்துவராக பணியாற்றி வந்த இவா், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கீழ்வேளூருக்கு வந்துகொண்டிருந்தாா்.

கீழ்வேளூா் அரசாணி குளம் அருகே வந்தபோது, நாகையில் இருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் போலீஸாா், திருமலையின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT