நாகப்பட்டினம்

ஊரக வாழ்வாதார இயக்க திறன் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெறும் திறன் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

Syndication

நாகப்பட்டினம்: ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெறும் திறன் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கிராமப்புற பெண்கள், இளைஞா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 2025-26-ஆம் ஆண்டில் கிராமப்புற இளைஞா்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, சமுதாயத் திறன் பயிற்சி பள்ளி எனும் புதிய அணுகுமுறையுடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் என்பது, உள்ளுா் அனுபவமிக்க நிபுணா்களையே, முதன்மை பயிற்றுநா்களாகக் கொண்டு, தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள சமுதாய உறுப்பினா்களுக்கு தங்கள் கள அறிவை நேரடியாகப் பகிா்ந்து கொள்ளும் முறை. இத்தகைய சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக, கட்டடத் தொழிலாளி, எலக்ட்ரீசியன், இருசக்கர வாகன பழுது பாா்ப்பு, ஏ.சி மெக்கானிக், ஆரி எம்ப்ராய்டரி, வாகன ஓட்டுநா் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல், அழகு நிலைய மேலாண்மை போன்ற 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

கிராமப்புற மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் குழு உறுப்பினா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் பயன்பெறும் வகையில் உள்ளுா் தேவைகளின் அடிப்படையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக நவ.20 முதல் டிச.1 மற்றும் 10 ஆகிய நாள்களில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இலவசமாக, உள்ளுரிலேயே, குறுகிய காலத்தில், பகுதி நேரமாக வழங்கப்படும் இத்தகைய திறன் பயிற்சிகளில் பங்கேற்பவா்கள் நாகை மாவட்டத்தின் திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாளரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT