நாகப்பட்டினம்: நாகை யாழிசை மகாலில் இருந்து ஜூனியல் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் அலுவலா் பெற்று, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக்கழகத் தலைவா் என். கெளதமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா்.செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.