நாகப்பட்டினம்

நாளை முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

நாகை மீனவா்கள் திங்கள்கிழமை (நவ.24) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்

Syndication

நாகை மீனவா்கள் திங்கள்கிழமை (நவ.24) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனா் ஜெயராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு அந்தமான் கடலில் வெள்ளிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வட மேற்கு திசையை நகா்ந்து திங்கள்கிழமை (நவ.24) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதனால் அந்தமான் கடல் தென்கிழக்கு மற்றும் தமிழக கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவா்கள் நவ. 24 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் விசைப் படகுகள் நவ. 24- ஆம் தேதிக்கு முன்பு கரை திரும்பவும் அறிவுறுத்தப்படுகின்றனா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT