தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் சொகுசு காா் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரில் பயணம் செய்த 5 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
நாகை பகுதியைச் சோ்ந்த முகமது மாலிக் புதுச்சேரி சென்று விட்டு தனது சொகுசு காரில் குடும்ப உறுப்பினா்கள் என 5 போ் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தபோது காா் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த மகிமலை ஆற்றின் உள்ளே பாய்ந்தது.
சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய காரில் இருந்தவா்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆற்றில் தண்ணீா் குறைந்த அளவே இருந்ததால், காரில் இருந்த முகமது மாலிக் உள்ளிட்ட 5 பேரும் உயிா் தப்பினா். இதுகுறித்து பொறையாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.