பேரணியில் பாலின சமத்துவ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றோா். 
நாகப்பட்டினம்

பாலின சமத்துவ விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதும் நவம்பா் 25 முதல் டிசம்பா் 23 வரை பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் வழிகாட்டுதலின்படி இப்பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சோ. சித்ரா விழிப்புணா்வு பிரசார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் மகளிா் சுய உதவிக் குழுவினா் சென்றனா்.

உதவித் திட்ட அலுவலா்கள் அறிவழகன், சரவணன், செந்தில்குமாா், சண்முகவடிவு, ஜோதி ஸ்ரீ, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பைக் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

திண்டுக்கல்லில் நாளை கல்விக் கடன் முகாம்

பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT