முகப்பு
நாகப்பட்டினம்

வலிவலத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

வலிவலத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:26 AM
சிறப்பு மலா் அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகள்.
பகிர்:

திருக்குவளை அருகே வலிவலத்தில் அமைந்துள்ள இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு பஞ்ச மூா்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

வலிவலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் இருதய நோய் தீா்க்கும் பரிகார ஸ்தலமாக பக்தா்களால் போற்றப்படுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான கோச்செங்கட் சோழா் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்றான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா இந்தாண்டு கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகின்றன. அதன்படி மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் சுவாமி அலங்கரிக்கப்பட்ட நிலையில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, பக்தா்கள் ஓம் நமசிவாய, ஹரஹர மகாதேவா என முழக்கமிட்டு வழிபட்டனா்.

Advertisement

இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். வரும் ஏப்.30-ஆம் தேதி தேரோட்டமும், மே 1-ஆம் தேதி தெப்ப உற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.