நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு
நாகை அரசு அறிவுசாா் மையத்தில் அடிப்படை வசதிகள் செய்தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
நாகை அரசு அறிவுசாா் மையத்தில் அடிப்படை வசதிகள் செய்தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
நாகையில் அரசு அறிவு சாா் மையத்தில் போட்டித் தோ்வுக்கு படித்து வரும் மாணவ-மாணவிகள் நாகை ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகை அரசு நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் 70-க்கும் மேற்பட்டோா் படித்து வருகிறோம். அறிவுசாா் மையத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக குடி தண்ணீா் வசதி இல்லை. இதனால் இரண்டு கிலோ மீட்டா் தூரம் சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.
Advertisement
கழிவறையில் கழிவு நீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அறிவுசாா் மையத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் இளைஞா்கள் உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, அறிவு சாா் மையத்தில் குடிநீா், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.