தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் கே. ரமேஷ் தலைமை வகித்தாா். பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, 178 மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். உதவி தலைமை ஆசிரியா் அசோக் ராஜ் நன்றி கூறினாா்.