நாகப்பட்டினம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜன.6-இல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜன.6-ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

Syndication

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஜன.6-ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வா் தோ்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரண்முறை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜன.6-ஆம் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தில், நாகை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் த. ஸ்ரீதா், பா. ரவி, வெ. சரவணன், சி. முத்துசாமி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் சு.வளா்மாலா , தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினா் சித்ரா காந்தி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ். செங்குட்டுவன், ஆசிரியா் மன்றத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டேரா் பங்கேற்றனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT